காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

மீண்டும் புதுப்பொலிவுடன் மலர்கிறது காங்கேயனோடை இன்போ

கடந்த 4 மாதங்களாக ஒரு சில தீய விசமிகளால் தடை செய்யப்பட்ட எமது காங்கேயனோடை இன்போ இணையத்தளம் இன்று முதல் புதுப்பொலிவுடன் மலர்கிறது அல்ஹம்துலில்லாஹ்

இன்றிலிருந்து எமது வாசகர்கள் http://www.kankeyanodai.info என்ற எமது வழமையான முகவரிலேயே எமது இணையத்தை பார்வை இடலாம் என்ற சந்தோசமான செய்தியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

மேலும் எமது இந்த முயற்சிக்கு உற்சாகமூட்டி பல்வேறு உதவிகளையும் வழங்கி வரும் அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் 

நாம் இந்த சேவையை தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு   தொடர்ந்தும்
 இலக்கானோம் 

எதையும்  பொருட்படுத்தாமல் இதனை தொடர்ந்து மிகச்சிறிய வளங்களுடன் முன்னேடுத்துக்கொண்டிருக்கும்போதே

காங்கேயனோடை இன்போ இணையத்தளம்

 05/06/2012 அன்று  மாலை  இலங்கை   நேரப்படி சரியாக 5 மணிக்கு   சில  இணையத்தள  விஷமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது 

சமுக நலனை மட்டுமே முதன்மைபடுத்தி எந்த இலாப நோக்கமும் கருதாது நாம் ஆரம்பித்த இந்த சிறிய காலத்துக்குள்ளே இவ்வாறு நசுக்கப்பட்டுள்ளோம்

சமுக நலனை மட்டுமே முதன்மை படுத்தி நாம் செயற்படும்போது ஏற்படும் சுமைகளை சுமக்கவும் சத்தியத்தின் வழி நின்று உண்மையாகவும் நேர்மையாகவும் துணிவாகவும் செயற்படுவதுடன் எந்தவித சலசலப்போ அல்லது அச்சுறுத்தல்ககலோ எமது பயணத்தை கட்டி போடாது என்பதை எமது உறவுகளுக்கு தெரிவித்து கொள்கின்றோம்

தொடர்ந்தும் எமது வாசகர் வட்டத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு திட்டத்தை எமது இணையத்தள நிருவாகம் முன்னெடுக்கவுள்ளது அந்த வகையில் முதல் கட்டமாக எமது ஊரை சேர்ந்த சகோதர சகோதரிகளின் கணக்கெடுப்பை  மேட்கொள்ளவுள்ளோம்

அந்த வகையில் காங்கேயனோடை யைசேர்ந்த எமது இணயத்தை விரும்பும் சகோதர சகோதரிகள் எமது இணையம் தொடர்பான உங்களது  மேலான ஆலோசனைகளையும் குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுவதோடு  எங்களது இந்த கன்னி முயற்சிக்கு உற்சாகம் ஊட்டுமாரும் எமது காங்கேயனோடை மண்ணின் பெருமைகளை உலகறிய வைக்கும் இந்த பயணத்தில் அனைத்து அன்பர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

வஸ்ஸலாம்

எமது மின் அஞ்சல் முகவரி: kankeyanodaiinfo@gmail.com

Advertisements

Filed under: News (Local),

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None