மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி பட்டறையொன்று நேற்று (21.11.2012) ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப் பற்று பிரதேச செயலக கலாசார பிரிவினால் இந்த ஓவியப் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
இதன் ஆரம்ப வைபவத்தில் மண்முனைப்பற்ற பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா மற்றும் கலாசார உத்தியோகத்தர் எஸ்.சோமசுந்தரம், கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷஷெய்க் ஏ.எல்.முசாதிக், மற்றும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறவகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீ கமலச்சந்திரன், ஆரையம்பதி மகா வித்தியாலய அதிபர் தங்கவடிவேல் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஓவியப்பயிற்சி பட்டறையில் மண்முனைப் பற்று பிரதேசத்திலுள்ள 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
source-katankudi.info
Filed under: Uncategorized