காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

நாட்டில் தீவிரமடையும் முஸ்லிம் விரோத பிரசாரம்

ஏ.அப்துல்லாஹ் , அஸ்லம் அலி, சஹீத் அஹமட் :

இன்று பொது பலசேன அமைப்பினர் மாத்தளை நகரின் பூமியாங்கொட பகுதியில் முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் ஒன்றை மேற்கொண்துள்ளனர். பொது பலசேன என்ற அமைப்பு நாட்டின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து முஸ்லிம் விரோத கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றது.

இவர்கள் பெருகிவரும் முஸ்லிம்களின் இனப் பெருக்கம் இலங்கையில் பௌத்தர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் , முஸ்லிம்கள் பௌத்தர்களின் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் என்றும் , பெளத்த அடையாளங்களை முஸ்லிம்கள் இலங்கையில் அழிக்கிறார்கள் என்றும் இந்த நிலையை தொடர விட்டால் இலங்கை விரைவில் முஸ்லிம் நாடாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் பகிரங்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளை முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பௌத்தர்கள் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் கோருவதாக தெரிவிக்கப் படுகிறது .

கடந்த வாரம் இடம்பெற்ற பொது பலசேன ஊடக மாநாடொன்றில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹலால் சான்றிதழ் தொடர்பாகவும் எதிர் கருத்துக்களை தெரிவித்ததுடன் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்கவேண்டாம் என்று சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது

கடந்த இரு வாரங்களில் பொது பலசேன இரு பத்திரிகையாளர் மாநாடுகளை நடாத்தியுள்ளதுடன் , பல பேரணிகள் , ஆர்பாட்டங்கள் ,சுவரொட்டி , மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் முஸ்லிம் விரோத பிரசாரத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் ஈடுபட்டு வருகின்றது .என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று இரவு பதுளை -பதுளைப்பிட்டிய என்ற பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் 10 ஆடுகள் திருடப்பட்டுள்ளதுடன் திருடிய ஆறு ஆடுகளை பதுளைப்பிட்டிய நெலும்கம என்ற சந்தியில் வெட்டி வீசியுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது .

ஆடுகள் திருட்டுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பதுளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை பொது பலசேன அமைப்பினரே நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையமொன்றில் பௌத்த சின்னங்கள் பொறிக்கப்பட்ட கையுறை ஜோடி ஒன்றை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் நபர்களை கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதிகளை விடுதலை செய்யக் கூடாது எனக் கோரி பொது பலசேன அமைப்பினர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியியுள்ளனர்.

இவை தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாக இருக்காது உடனடியாக செயல்படவேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

sourc-lankamuslim

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None