காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காணாமல்போன மீனவர்களின் நிலை என்ன?

38கடந்த திங்கட்கிழமை மாலை காங்கேயனோடை வாவியில் மீன்பிடிக்கச்சென்ற சறூக் மற்றும் றபாய்தீன் ஆகிய இருவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வாவியில் வீசிய சுழல் காற்றினால் தோணி கவிழ்ந்ததில் வாவியில் மூழ்கி காணாமல் போனார்கள்.

‘யா அல்லாஹ் எனது மகனையும் மருமகனையும் உயிருடன் மீட்டுத்தா’ என அழுதழுது பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றார் காங்கேயனோடை 12ம் வட்டாரத்தை சேர்ந்த காசாறா உம்மா.

 

Rafaideen Mother

றபாய்தீனின் தாய் (சறூக்கின் மாமி)

இவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இவர்கள் கொண்டு சென்ற தோணி வலை என்பன கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

3

காணாமல் போன மினவர்களின் மீன்பிடிக்க கொண்டு சென்ற (மீட்கப்பட்ட) தோணி மற்றும் வலை

இன்னும் இவ்விருவரும் மீட்கப்படவில்லை இவ்விருவரை தேடும் பணியில் செவ்வாயக்கிழமை முழு நாளும் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டும் பயணளிக்கவில்லை.

றபாய்தீன் (34) இவர் ஒரு மீனவரல்ல, இவர் முல்லைத்தீவில் ஒரு ஹோட்டல் கடையொன்றில் கூலிக்கு நிற்பவர் அன்றைய தினம் ஊரில் நின்றதால் அவரின் மச்சான்  சறூக் மீன்பிடிப்பதற்காக வாவிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு அறூஸ் (வயது10), சனா (வயது06), அனஸ் (4மாத குழந்தை) இந்த மூன்று பேரும் தனது தந்தையை தேடி பரிதவிக்கின்றனர்.

RAFAIDEEN CHILDREN
இது றபாய்தீனின் குழந்தைகள் இந்த குழந்தைகள் தனது தந்தை றபாய்தீனை தேடிக்கொண்டே இருக்கின்றனர்.

இது றபாய்தீனின் சனா எனும் பெண்குழந்தை

Sana

எதுவும் அறியாத இந்த அப்பாவி குழந்தை தனது தந்தைக்கு என்ன நடந்தது எப்போது வருவார் என்பதெல்லாம் தெரியாது, தந்தை வருவார் என நம்பிக்கொண்டு இருக்கின்றது.

றபாய்தீனின் சஹீட் எனும் 2வயது குழந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிணற்றில் தவறுதலாக விழுந்து மரணமடைந்ததையும் இந்த குடும்பத்தினர் இங்கு இதை சோகத்துடன் ஞாபகப்படுத்தி பார்க்கின்றனர்.

அடுத்தவர் சறூக் இவருக்கு 3 ஆண்பிள்ளைகள் சப்ரி, சதாத், முனாதி ஆகிய பிள்ளைகள் உண்டு.

இவர்களில் இருவர் க.பொ.த.சாதரண தர பரீட்சை எழுதிவிட்டு இருக்கின்றனர். எங்களது தந்தை உயிருடன் வருவது கேள்விக்குறியானது என்ற கவலையுடனும் ஏக்கத்துடனும் காணப்படுகின்றனர்.

இந்த காங்கேயனோடை வாவிக்கு சென்று மீன்பிடித்து அல்லது இறால் பிடித்து அதை விற்பணை செய்து எங்களுக்கு சாப்பாடு தந்தவர் எங்களது தந்தை சறூக். இனி எங்கள் காலம் எப்படிப் போகப் போகின்றது தெரியவில்லை அல்லாஹ் போதுமானவன் என்று கூறுகின்றனர் சறூக்கின் பிள்ளைகள்.

சறூக்கின் கூடப்பிறந்த சகோதரரான றசீத் என்பவர் 1990ம் ஆண்டு இதே காங்கேயனோடை வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வாவியிலேயே விழுந்து தோணி கவிழ்ந்து காணாமல் போனார் பின்னர் அவரின் ஜனாசா நான்கு தினங்களுக்குப்பின்னர்தான் வாவியிலிருந்து மீட்டெடுத்து அவரை அடக்கம் செய்தனர் என்பதையும் இக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
Sarooq Children
சறூக்கின் மூன்று பிள்ளைகள் இவர்கள்

காணாமல் போயுள்ள இக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளும் வசதிகள் குறைந்தவைகள் இவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் உட் புகுந்துள்ளது.

KO House
இது அவர்களின் வீடு

வாவியில் காணாமல் போயுள்ள இவர்கள் இருவரின் நிலையும் என்ன என்பதை அறிந்து கொள்ள இவர்களின் குடும்பத்தினர் வீதியிலேயே நின்று கொண்டிருக்கின்றனர். உணவின்றி, உறக்கமின்றி அழுது புலம்பும் இக்குடும்பதிற்கு இவர்கள் உயிரிழந்திருந்தால் அவர்களின் ஜனாசாவாவது கிடைத்தால் ஒரு ஆறுதலாக இருக்கும் என காங்கேயனோடை முக்கியஸ்த்தர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

காங்கேயனோடை வாவியில் முதளைகள் நான்கு கிடக்கின்றன. இவைகள் பெரிய முதளைகள், இவர்களிருவரையும் முதளைகளும் விழுங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

எது எப்படியிருந்த போதிலும்  காணாமல் போன இந்த இரண்டு பேரின் நிலை என்ன? உயிரிழந்திருந்தால் அல்லாஹ் அவர்களை ஷுஹதாக்களின் வரிசையில் சேர்ப்பானாக

Zarooq

Rafaideen

Advertisements

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None