காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் நிகழ்வு – 2012

 

EX Book Invitation 2012

இலவச அப்பியாசக் கொப்பி விநியோக அழைப்பு

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வருடாவருடம் நடைமுறைப்படுத்தி வரும் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் வேலைத்திட்டத்தில் இவ்வருடத்திற்கான அப்பியாசக்கொப்பி விநியோக அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 27.12.2012 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 

தொடர்ச்சியாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வுகளில் சுமார் 8000 வறிய தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை PMGGயின் கல்விப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

 

இதேவேளை இம்முறை ஏறாவூர், கல்குடா, திருகோணமலை, மூதூர், கிண்ணியா மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள வறிய மாணவர்களுக்கும் இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இந்த இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Filed under: News (Local), , ,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None