காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடையில் தடைப்பட்டிருக்கும் பஸ் வண்டிச் சேவையை மீள ஆரம்பிக்கக் வேண்டி மீஸான் நிறுவனம் கடிதம்

1455920_1387565304821582_1363634152_nதடைப்பட்டிருக்கும் பஸ் வண்டிச் சேவையை மீள ஆரம்பிக்கக் வேண்டி சாலை முகாமையாளருக்கு எழுதி அனுப்பப்பட்ட கடிதம் எமது மக்களின் பார்வைக்காக.சாலை முகாமையாளர்,
இ.போ.சபை,
காத்தான்குடி சாலை,
காத்தான்குடி.

காங்கேயனோடைக் கிராமத்துக்கான தடைப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்துச் சேவையினை மீள ஆரம்பிக்கக் கோரல். (காங்கேயனோடை – மட்டக்களப்பு வைத்தியசாலை)

மேற்படி கிராமத்தில் செயற்பட்டு வரும் ஒரு தண்னார்வுத் தொண்டு நிறுவனம் என்ற வகையில், தங்களின் பணிவான கவணத்திற்கு கொண்டுவருவதாவது, மேற்குறித்த காங்கேயனோடைக் கிராமம், மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள வளர்ந்து வரும் ஒரு பாரம்பரிய கிராமமாகும். இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு, பொதுக்கட்டுமானங்கள் சிலவும் காணப்படுகின்றன. இங்கிருந்து மக்கள் நாளார்ந்தம் துஶ்ர இடப்பாடசாலைகளுக்கும், தொழிலுக்கும், வைத்திய சாலைக்கும், பொதுச்சந்தை, அரச அலுவலகம், மற்றும் வங்கிகள் போன்ற வற்றிக்கும் சென்று வருகின்றனர். அத்தோடு ஆரையம்பதி பிரதான வீதி, மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசத்திற்கும் சென்று வருவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறான மக்களின் போக்குவரத்தானது, பொதுப் போக்குவரத்து வசதியின்மை காரணமாக மிகவும் கஷ்டத்துடனும், வேதனையுடனும் நடை பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் கடந்த காலங்களில் இம்மக்களின் பொது நலன் கருதி “காங்கேயனோடை – மட்டக்களப்பு”க்கான ஒரு நாளார்ந்த பஸ் சேவை தங்களது சாலையால் நடாத்தப்பட்டு வந்தது தாங்கள் அறிந்ததே, இருந்த போதிலும் இவ்வீதி அகலமின்மை காரணமாகவும், வீதி சீரின்மை காரணமாகவும் பின்னர் இச்சேவை இடைநிறுத்தப்பட்டதாக அறிய முடிந்தது. தற்போது இவ்வீதியானது கௌரவ அல்ஹாஜ் தாஜஶ்ல் மில்லத் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்களின் அயராத முயற்ச்சியினால் அகலமாக்கி, புதிய வீதியாக அழகாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

எனவே தயவு செய்து இக்கிராம வறிய மக்களின் போக்குவரத்து நலன் கருதியும், அவர்களின் பொருளாதார விரயம், மற்றும் நேரவிரயம் போன்றவற்றுடன் இம்மக்களின் ஆதங்கத்தினையும் கருத்திற் கொண்டு மேற்குறித்த வாறு “காங்கேயனோடை – மட்டக்களப்பு வைத்திய சாலை”க்கான பொதுப் போக்குவரத்துச் சேவையினை மீள ஆரம்பித்து உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் இக்கிராமத்தின் வளர்ச்சி வேகத்தினை அதிகரிக்க முடியும் என எமது நிறுவனம் நம்புகின்றது.

இவ்வண்ணம்,
செயலாளர்,
மீஸான் ஶ்ரீலங்கா.

பிரதிகள்:.
01. கௌரவ அல்ஹாஜ் தாஜஶ்ல் மில்லத் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் . தங்களின் மேலான கவணத்திற்கு.
02. கௌரவ அல்ஹாஜ் சிப்லி பாருக் (பொரியியலாளர்) மாகாண சபை. கி.மா. தங்களின் மேலான கவணத்திற்கு.
03.செயலாளர், பிரதேச சபை, மண்முனைப்பற்று, ஆரையம்பதி. தகவலுக்கும், சிபாரிசுக்கும்.
04. தலைவர், செயலாளர், ஜாமியுல் மஸ்ஜித் பெரிய ஜஶ்ம்மா பள்ளிவாயல், காங்கேயனோடை. தகவலுக்காக.
05.தலைவர், செயலாளர், முகைதீன் ஜஶ்ம்மா பள்ளிவாயல், காங்கேயனோடை. தகவலுக்காக.
06.பிராந்திய பிரதான முகாமையாளர், இ.போ.சபை, கிழக்குப் பிராந்தியம், கல்முனை.

Advertisements

Filed under: Kankeyanodai, Uncategorized,

One Response

  1. மாஷா அல்லாஹ் வரவேற்கப்பட வேண்டிய விடயமும்,தற்போதைய அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றுதான்… இந்த விடயம் இதுவிடயமாக பாடுபடும் மீஸான்ஸ்ரீலங்கா வுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None