காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு

பழுலுல்லாஹ் பர்ஹான்:

1467352_1400683240176455_1747014276_nகாங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தற்போதய உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீனின் “உழைப்போம் உயர்வோம்” வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரைம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேயனோடை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு  20-12-2012 நேற்று வெள்ளிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மீஸான் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் வி.கமலதாஸ்,ஸ்ரீ.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், பெண்களுக்கும் வழுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா, காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் தலைவர் ஆசிரியர் இல்யாஸ், ஊர் பிரமுகர்கள் மீஸான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ,ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் மற்றும் அதிதிகளினால் 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காங்கேயனோடை மீஸான் நிறுவனம் காங்கேயனோடை பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்துவரும் மிகவும் பழமைவாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC07589

 

 

DSC07591-655x360

 

DSC07606

 

DSC07608

 

DSC07639

 

DSC07646

 

DSC07651

 

DSC07654

 

DSC07657

 

DSC07659

Advertisements

Filed under: Kankeyanodai,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None