காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை மண்ணுக்கு மற்றுமோர் வைத்தியர்

stock-photo-portrait-of-muslim-asian-female-medical-doctor-looking-at-xray-133392074

நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் காங்கேயனோடை பிரப்பிடமாகவும் கதுருவலை வசிப்பிடமாகவும் கொண்ட எப்.எச். பனீக்கா என்ற மாணவி பொலன்னறுவை மாவட்ட மட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் 8 இடத்தை பெற்றுக் கொண்டார். (இது இவரின் இரண்டாம் தடவையாகும்) இவருக்கு எமது ஊர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். இவருடைய எதிர் காலம் சிறப்பாகவும் அதிலும் குறிப்பாக வைத்தியராகி சிறந்த சேவைகளை மேற்கொள்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

மேலும் எமது காங்கேயனோடையில் படித்து பரீட்சை எழுதிய 7 மாணவர்களில் (3 பெண்கள், 4 ஆண்கள்) ஏ.பி. சுகைனா என்ற மாணவி கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 49 ம் () இடத்தைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளார். அத்தோடு ஏ.கே.எப். சாஜிதா என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் 192 ம் () இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு ஆசிரியர் பயிற்ச்சிக் கலாசாலைக்கு தகுதி பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. எனவே இவ்விரண்டு மாணவிகளுக்கும் எமது ஊர்சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் இப்பரீட்சையில் சரியான புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போன மாணவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சிகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் உள்ளது அல்லது வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தவும் வசதிகள் உள்ளமையால் கவலைகளை விட்டு சரியான ஆலோசனைப்படி தமது எதிர்கால வாழ்வை திட்டமிடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Advertisements

Filed under: Kankeyanodai

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None