காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

மதிய போசனத்துடன் திறந்து வைக்கப்பட்டது காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (படங்கள் இணைப்பு )

12540643_201534743527140_8935510061569368042_nஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டகாங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிட திறப்பு  விழா  சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களின்  பங்குபற்றுதலுடன்  வெகு விமரிசையாக இடம் பெற்றது


காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் அஷ்ஷெய்க் A ஆதம் லெப்பை பஹ்ஜி தலைமையில் இடம்பெற்ற  இத் திறப்பு விழாவில் பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும் இராஜங்க அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் பொறியலாளர் அஷ்ஷெய்க்அப்துல் அசீஸ் பின் ஹுசைன் அல் முதவல்லி, மற்றும் கலாநிதி அஷ்ஷெய்க் உஸ்மான் பின் ஹுசைன் அல் முதவல்லி கலந்து சிறப்பித்தனர்

மேலும் இந்நிகழ்வில்  கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் அல்ஹாஜ் ஏ , எல் அப்துல் ஜவாத் B.A (HONS) LLB. ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஜூனைட் நளீமி ஆகியோரும் கலந்து கொண்டனர்

இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர்  அதிதிகளினால் மேற்படி பள்ளிவாயல் கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது  சுமார் ஆயரக்கனக்கான பொதுமக்கள் மிகுந்த மன மகிழ்வுடன் கலந்து  சிறப்பித்தனர் இதன்போது அனைவருக்கும் மதிய போசன நிகழ்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

.குறித்த பள்ளிவாயல் மிக நீண்ட காலமாக புனரமைக்கபடாமல் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில்  ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும் இராஜங்க அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அயராத முயற்சி காரணமாகவும் சவூதி அரேபிய தனவந்தர்களின் பண உதவியின் காரணமாகவும் இப்புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

இந்த தூய பணியின் காரண கர்த்தாவான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு காங்கேயனோடை இன்போ இணைய குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றது

 

IMG-20160115-WA0071IMG-20160115-WA0070IMG-20160115-WA0069IMG-20160115-WA0068IMG-20160115-WA0067IMG-20160115-WA0042IMG-20160115-WA0072

 

IMG-20160115-WA0073IMG-20160115-WA0068IMG-20160115-WA0051IMG-20160115-WA0056IMG-20160115-WA0037IMG-20160115-WA0006

12540643_201534743527140_8935510061569368042_n

Advertisements

Filed under: Kankeyanodai

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None