காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை


காங்கேயனோடையின் வரலாறு ஓர் அறிமுகம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இது மட்டக்கள்ப்பு நகரிலிருந்து தென் பகுதியில் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்த்துள்ளது. இதன் வட கிழக்கில் ஆரயம்பதியும், தென் கிழக்கில் கீச்சான் பள்ளமும், மேற்கு எல்லையில் மட்டக்களப்பு வாவியும், தெற்கில் மாவிலங்கத்துறையும் அமைந்த்துள்ளன. இதி அரை சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக்க் கொண்ட பிரதேசமாகும்.

காங்கேயனோடை வரலாற்றை நோக்குகையில் இதன் முதற் குடியேற்றம் ,ஊருக்கு பெயர் தோன்றிய காரணம்,மக்களின் உறவு முறைகள் போன்றன ஆராயப்பட வேண்டும்.
முதலில் காங்கேயனோடை என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு விடை காணப்பட வேண்டும். “காங்கேயன்” என்ற ஒருவன் ஓடை வெட்டி முதலில் குடியிருந்ததாகவும், பின்னர் மக்கள் குடியேறி காங்கேயனோடை எனும் பெயர் சூட்டி வாழ்ந்ததாகவும் இங்கு வாழும் மக்கள் வாய் வழிக்கதையாக கூறி வருகின்றனர்
உண்மையில் காங்கேயனோடை எனும் பெயர் எப்படி வந்தது என நாம் ஆராயும் போது வேரொரு முடிவிற்கே வர வேண்டியுள்ளது.

காங்கேயன் என்ற சொல் இறைவனை குறிக்கின்ற ஒரு சொல்லாகும் தமிழ் அகராதியில் காங்கேயன் என்ற சொல்லுக்கு அவ்வாறுதான் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே காங்கேயனோடை என்பதற்கு இறைவனின் ஓடை என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும் இறைவன் என்ற சொல்லை விட அக்காலத்தில் காங்கேயன் என்ற சொல் தாரளமாக புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் . இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் காங்கேயன் தொகுதி, காங்கேசந்துறை போன்ற பெயர்கள் உருவாகி இருக்கி இருக்கின்றன. அக்காலத்தில் காங்கேயன் என்ற தனி நபர் ஒருவருக்கு பெயர் இருந்த்திருந்தால் இப்போதும் அப்பெயர் மக்களுக்கு இடப் பட்டிருக்கும் இப்போது அப்பெயர் கொண்டு யாரும் அழைக்கப்படுவதுமில்லை , நாம் கேள்விப்படவுமில்லை. இவ்விடயங்களை ஆய்விற்கு உற்படுத்தி நாம் காங்கேயனோடை என்ற பெயர் எவ்வாறு வந்திருக்கலாம் என்ற முடிவுக்குபின்வரும் விடயங்களை ஆழமாக பார்ப்பதன் மூலம் வர முடியும்

காங்கேயனோடையின் கிழக்கு பக்கத்தில் கோவில்குளம்,ஆனைக்குளம், குத்தியண்டகுளம் போன்ற குளங்கள் காணப்படுகின்றன வருடா வருடம் பெய்கின்ற பருவ மழையினால் நிரம்பும் இக்குளங்களில் இருந்து வெளியேறும் நீர் காங்கேயனோடையின் மேற்கு பக்கம் இருக்கின்ற மட்டக்களப்பு வாவியை சென்றடைகிறது குளங்களிருந்து வெளியேறும் நீர் பள்ளப் பகுதியாக இருக்கின்ற காங்கேயனோடை வழியாக வாவியை சென்றடைகிறது நீர் வாவியை சென்றடையும் வாய்க்கால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப் பட்டதல்ல ,நீர் ஓடும் போக்குக்கு ஏற்ப இந்த வாய்க்கால்கள் இயற்கையாகவே தோன்றியுள்ளன. இங்கு அமைந்துள்ள ஓடைகளின் வளைவுகளைப் பார்க்கின்ற போது இது தெளிவாகின்றது ஆனைக்குளம், பறையன்குளம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நீர் காங்கேயனோடையின் முதலாவது ஓடை வழியாகவும் குத்தியன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் இரண்டாவது ஓடை வழியாகவும் வாவியை அடைகின்றது
இக்குளங்களில்லிருந்து வருடக்கணக்கில் நீர் வழிந்தோடி இயற்கையாகவே இவ் ஓடைகளை உருவாக்கிக் கொண்டது.இயற்கையாகவே உருவான ஓடைகளுக்கு மக்கள் இறைவனின் ஓடை என்று பெயர் சூட்டி இருக்கலாம் அல்லது மரபு வழியாக இறைவன் என்ற சொல்லுக்கு அப்போது வழக்கில் இருந்து
காங்கேயன் என்ற பொருள் பட காங்கேயனோடை என்று பெயர் வந்திருக்கலாம் என்பதே அறிவியல் ரீதுயாக பார்க்கின்ற போது புலப்படுகின்றது .

இக்கிராமத்தில் வாழும் மக்கள் இன்றும் கூட காங்கேயனோடை 12ம் வட்டாரத்தை காங்கேயனோடை என்றும் 13ம் வட்டாரத்தின் முன் பகுதியை திடல் என்றும் பின் பகுதியை துறை என்றும் மரபு வழியாக அழைப்பதும் காங்கேயனோடை என்ற பெயருக்கு சான்றாக அமையும் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் குடியேறிய காலப்பகுதியில்தான் இங்கும் முஸ்லிம்கள் குடியேறிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை .மட்டக்களப்பில் முஸ்லிம்கள் இரு காலகட்டங்களில் தங்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள்

1. திமிலர்களுக்கும்-தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தின் போது தமிழர்களுக்கு உதவி புரிய வந்த பட்டாணியர்களை தமிழர்கள் யுத்ததில் வெற்றி அடைய மட்டக்களப்பிலேயே தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள் . முக்குவப் பெண்களை மணந்து தமது வாரிசுகளை பெருக்கி கொண்டார்கள் இதன் காரணமாக தமிழர்களின் 50% கலாசாரப் பண்புகளும் முக்குவர்களின் குடி மரபுகளும் முஸ்லிம்களிடம் இன்று காணப்படுவது சான்றாகும்.

2. 15ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய காலணித்துவ ஆட்சியுடன் ஆரம்பத்தில் இலங்கையுடன் தென்பகுதி முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டபோது அங்கிருந்து வெளியேறி கண்டி மன்னனின் ஆட்சிப் பிரதேசமான மட்டக்களப்பில் குடியேறினர் இந்த இரு கட்டங்களில் முதலாம் கட்டத்திலே முஸ்லிம்கள் காங்கயனோடையில் குடியேறினார்கள் என்பது ஆய்வுக்குரிய விடயமாகும்

 • காங்கயனோடை யாருமற்ற நிலப்பரப்பாக இருந்த போது முஸ்லிம்கள் குடியேறினார்களா?
 • இந்து முக்குவ பெண்களை திருமணம் செய்து முஸ்லிம்கள் குடியேறினார்களா?

என்பதும் ஆய்வுக்கு உரியதே, முக்குவப்பெண்களுடனான கலப்பு திருமணத்தின் ஊடாகவே காங்கேயனோடை குடியேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கருத்து வலுவடைந்தால் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் முஸ்லிம் குடும்பங்கள் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரலாம் இந்த காலத்தில்தான் இக் குடியேற்றம் நடை பெற்றிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதாரத்தினையும் இங்கு இனம் காண முடியும் முக்குவர்களிடையேயும்,ஆரயம்பதி தமிழர்களுக்கிடையேயும் காணப்படும் குடி வழிமுறை காங்கேயனோடையிலும்,காத்தான்குடியின் ஒரு பகுதியிலும் இன்றும் காணப்படுவதை ஒரு சான்றாக கூறலாம்.

காத்தான்குடியின் ஒரு பகுதியும்(4,5ம் வட்டாரம்) காங்கேயனோடையும் ஆரம்பத்தில் ஒரு பிரதேசமாக இருந்திருக்கின்றது பின்னர் 1872ம் ஆண்டு தனித்தனி பிரதேசமாக பிரிக்கப் பட்டது என்ற வரலாற்றை வி சி கந்தையாவால் யெலுதப்பட்ட மட்டக்கலப்பு சைவக்கோவில்கள் என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாக கொள்ளலாம் மேலும் இரு விடயங்களையும் இதற்கு ஆதாரமாக காட்டலாம் .
01-இப்பிரதேச முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ தொடக்கம் குறிப்பிட்ட காலம் வரை காங்கேயனோடை பெரிய பள்ளிவாயளிலேதான் ஜும்ஆ நடைபெற்றுள்ளது என்பதும்
02-காத்தான்குடி 4,5ம் வட்டாரத்திலும் காங்கேயனோடையிலும் காணப்படும் குடி வழிமுறை அதாவது குடிகளின் பெயர் ஒன்றாகவே காணப்படுகின்றமையும் ஆகும்

1.மாந்திரா குடி
2.மரானாக்காரங்காரக் குடி
3.சம்மான்காலக் குடி
4.வடக்கனாங் குடி
5.சாயக்காரங் குடி
6.நைனா ஓடவியார் குடி
7.கோசாங் குடி
8.உதுமான் பிள்ளை குடி
9.மலயாம்புள்ள குடி
10.ஓடாவி குடி
11.இலவ குடி
12.வல்லேவலி குடி

ஆனால் காத்தான்குடியின் ஏனைய பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிமுறை கிடையாது என்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும்

குடிமுறையை கொண்டு பார்க்கும் போது தமிழர்களீன் குடிப் பெயர்,குடி முறை வேறாக இருந்தாலும் குடிமுறை தமிழர்களில் இருந்து முஸ்லிம்களுக்கு சென்றுள்ளது என்றே கொள்ளப்பட வேண்டும்.கலாசாரத்தின் ஒரு அங்கம் இனத்திற்குள் திடீரென செல்வதற்கு எந்த காரணமும் கிடையாது. இதன் அடிப்படையில் முக்குவப் பெண்களுடனான திருமணத்தில் தான் குடிமுறை இரண்டு இனங்களிடையேயும் சென்றிருக்கலாம் என்பது கண்கூடு.

முக்குவப் பெண்களுடனான திருமணம் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் முஸ்லிம்களுக்கு சாத்தியமே தவிர போர்த்துக்கேய ஆட்சியில் துரத்தப்பட்ட போது சாத்தியமில்லை எனவே முஸ்லிமகளின் காங்கேயனோடை குடியேற்றம் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரலாம்
இதனடிப்படையில் முக்குவப் பெண்களை மணந்து தரிசாக கிடந்த நிலத்தில் நிகழ்ந்த குடியேற்றமாகவே காங்கேயனோடை கொள்ளப்பட இடமுண்டு.

1900க்குப் பின் காங்கேயனோடை கிராமமானது 155 காங்கேயனோடை ,155 பி காங்கேயனோடை தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகளைக்க் கொண்ட பிரதேசமாகும்
இங்கு வசிக்கும் மக்களது பிரதான தொழில்களாவன

 • மீன்பிடி
 • விவசாயம்
 • வியாபாரம்
 • வெளி நாட்டு வேலை வாய்ப்பு
 • அரச தொழில்

என்பனவாகும்

கிராம மக்கள் 1990 ஏற்பட்ட வண்செயல் காரணமாக 13/08/1990 திகதி அன்று அண்மையிலுள்ள காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்தார்கள் அப்போது அங்கு வாழ்ந்த குடும்பங்கள் தங்களது தொழில் வாய்ப்பு பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்
அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:

இடம் குடும்பங்களின் எண்ணிக்கை
கதுறுவெல 54
காத்தான்குடி 37
கொட்டாரமுல்லை 12
நாரமல (குருநாகல்) 10
திஹாரிய 04
பாலமுனை 03
ஓட்டமாவடி 02
ஏறாவூர் 01

ஏனைய குடும்பங்கள் அகதி முகாம்கள் உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்து பின்னர் பாதுகாப்பு படையின் உதவியுடன் ஒரு மாத காலத்தின் பின் குடியேறினர் “குடியேறிய போது அங்கு பள்ளிவாயல்கள் வீடுகள் பாடசாலைகள் பொது இடங்கள் கொள்ளை இடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் இருந்தன” பின்னர் படிப்படியாக வீடுகளையும் பள்ளிவாயல்களையும் புனரமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அக்காலப்பகுதி யில் கொலை செய்யப்பட்டவர்கள் 04 பேர் கடத்தப்பட்டு காணமல் போனோர் 12 பேர்கள் அவர்களின் விபரங்கள் வருமாறு:

கொலை செய்யப்பட்டோர்

 1. பக்கீர் மொகைதீன் ஆதம்பாவா
 2. சாகுல் ஹமீது நசீர்
 3. நூறு முஹம்மது இஸ்மாயில்
 4. அஹ்மத் லெப்பை ஆதம்பாவா

கடத்தப்பட்டு காணமல் போனோர்

 1. நூர் மொஹம்மது அப்துல் ரஹ்மான்
 2. நூர் மொஹம்மது பாரூக்
 3. நூர் மொஹம்மது நசார்
 4. அப்துல் ரசீத் முஹம்மது ஹனீபா
 5. சீகு மொஹைன் ரியாஸ்
 6. தம்பி லெப்பை சீத்தீக்
 7. தாவூது லெப்பை அசனார்
 8. அப்டுல் ரஹீம் மொஹம்மது இப்ரஹீம்
 9. செய்யிது அஹமது ஆதம்லெப்பை
 10. உதுமாலெப்பை கலந்தர் லெப்பை
 11. ஆதம்பாவா ஹயாத்து முகம்மது
 12. முஹம்மது ஹனீபா நாளீர்

தொடரும்……


Advertisements

8 Responses

 1. yaseer says:

  MAASHAA ALLAAH…….MORE WISHES FOR U……….

 2. yaseer says:

  வாவ்… வாவ் .. வாவ்…..வாவ்….இவ்வளவு நுணுக்கமாக நமது ஊரைப்பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்……உண்மையில் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்…மட்டுமல்லாது கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்…. காங்கேயனோடைக்கு கொடுத்தீர்கள் பாருங்கள் விளக்கம் அசத்திவிட்டீர்கள்….. காங்கேயன் என்ற சொல் இறைவனை குறிக்கின்ற ஒரு சொல்லாகும் தமிழ் அகராதியில் காங்கேயன் என்ற சொல்லுக்கு அவ்வாறுதான் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே காங்கேயனோடை என்பதற்கு இறைவனின் ஓடை என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். பின்னிட்டீங்க …….. நமது ஊரில் திறமைசாலிகள் இருந்தும் அத்திறமைகள் கெட்ட வழிகளுக்கே செலவழிக்கபடுகிறது….. இருந்தாலும் உங்கள் திறமையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை……. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். . வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • MCM says:

   ஜஸாக்கல்லஹு ஹைர்
   “யாசீர்”
   உங்களது கருத்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது தொடர்ந்து உங்களது கருத்தினையும்,வருகையினையும் எதிர் பார்க்கின்றோம்
   எமது மண்ணின் பெருமை எமது ஊர் மக்களுக்கு தெரிய வேண்டியதே எமது பிரதான எதிர்பார்ப்பு அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துனை புரிய துஆ செய்யுங்கள்

   உங்களது நண்பர்களுக்கும் இச் சேவையினை அறிமுகப்படுத்துங்கள்

 3. muhamed riiyas hamim says:

  tangs..unkal thiramaykku ean valthukkal unkal sevay entha thadum einry thidara akkha thunai privanaha…

 4. muhamed riiyas hamim says:

  tangs unkal thiramikku ean valthukkal unkal sevay eantha thadaum einry thodara allah thunay purivanaha…….

 5. mubarak,kuwait says:

  really appreciate to kankeyanodai info team.alhamdulillah.

 6. fathima emana says:

  good…….more wishes for you…..&….ur team.

 7. mj mohamed najath says:

  kalakkitinga boss,
  ur very intelligent guys,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

 • None