காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

ஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்

இப் பள்ளிவாயல் 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டதாக வரலாறு கூறுகின்றது
காத்தான்குடி,மண்முனை ஆகிய பிரதேசங்களுக்கான முதல் பள்ளிவாயலாகவும் ஆரம்ப ஜும்ஆ பள்ளிவாயலாகவும் இது விளங்குகின்றது.
காத்தான்குடி,மண்முனையில் குடியேறிய முஸ்லிம்கள் இப்பள்ளிவாயலுக்கு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக வந்துள்ளார்கள். அயற் கிராமங்களின் பள்ளிவாசலுக்கு மத்திய நிலையமாகவும் இது விளங்கியுள்ளது.

ஆரம்ப காலத்தில் பள்ளிவாயல் நிருவாகமானது பெரிய மரைக்கார்மார்கள் 11 பேர்களும் ஒவ்வொரு குடிகளுக்குமாக12 பேர்களும் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையும் இருந்தமை பற்றி குறிப்பிடப்படுகின்றது

குடி மௌலூது {சுப்ஹான மௌலூது}ஓதி கந்தூரி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது அந் நிருவாக சபையானது இக்கிராமத்தை மிகவும் சிறந்த தலைமத்துவத்தின் கீழ் வழி நடத்தியதை அறிய முடிகிறது. திருமணம்,தொழில்,தஃவா பணிகள் ,ஏனைய குடும்ப பிரச்சினைகள் அரசியல் சமூக பணிகள் என்பன இப்பள்ளிவாயல் நிருவாகத்தின் கீழ் வழி நடாத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக
“ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றாதோருக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அவர்களின் ஜனாஸாவை பொது மையவாடியில் அடக்கம் செய்வதை தடை செய்யும் அறிவித்தலை மக்களுக்கு வழங்கியும் அதனை நடைமுறைப் படுத்தியும் உள்ளார்கள்”

1988ம் ஆண்டு முஹைதீன் தைக்கா ஜும்ஆ பள்ளிவாயலாக மாற்றப்பட்டு அங்கும் ஜும்ஆ தொழுகை நடை பெறுகிறது.இதனால் இப்பள்ளிவாயலில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரமே ஜும்ஆ தொழுகை நடை பெறுகிறது.இதன் பின்னர் இரு பள்ளிவாயல்களின் நிருவாக சபைகளும் தனித்தனியாக இயங்கி வருகின்றன.ஆனால் தற்பொழுது 4 பள்ளிவாயல்களிலும் வாரம் விட்டு வாரம் ஜும்ஆ தொழுகை நடைபெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்

Advertisements

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None